Posts

Showing posts from March, 2022

To my papa

ஒற்றை மனிதனாய் பிறந்தவனே... அன்பை அள்ளி தெளிப்பவனே... எப்பொழுதும் என்னவளில் எண்ணத்தை விதைத்து... அதில் அன்பையும் நுழைத்து... பல உறவுகளை வளர்த்தவனே.... ரத்தத்தில் இணைந்ததல்லவே இப்பந்தம்... இணையத்தாலும் இதயத்தாலும் அல்லவா இணைந்தோம்.... கண்டெடுத்த  ஏணியிலே... தான் மட்டும் முன்னேறாமலும்.. மற்றவரையும் உயர்த்திட எண்ணுபவனே... படிகள் எல்லாம்... புன்னகையோடு..  ஒற்றுமையோடு... கை கோர்த்து நடை போட துணிந்தவனே .. உறவுகளை எல்லாம்  ஒன்றிணைத்தவனே... 10 படி ஏற 1 படி சருக்குமாம்... அதனையும் தான் மட்டும் வாங்கி கொண்டு... உங்களுக்கு  பின்னால் துணையாய் நிற்கிறேன் முன்னேறி போங்கள் என ஊக்கம் கொடுப்பவனே... பல சந்தர்ப்பங்களில் உன்னை கண்டு வியக்கிறேன்... அத்துனை கஷ்டங்களிலும் புன்னகைத்து... அதை எங்களிடம் மறைத்தும்..  பல சமயங்களில் புதைத்தும் .. அரவணைப்பின் அன்னையாய் நடை போடுகிறாயே... எப்படி வந்தது உன்னுள்... இத்தனை பக்குவம்... இத்தனை பகுத்தாய்வு... தனிமை நொடிகள் போக்க.. ஏச்சுக்கள் வாங்கவும் தயங்கியதில்லையே... மரமாய் நீ உயர நிழலில்  இழைப்பாருகிறோம் நாங்கள் ... உன் கோவத்தில் நனைந்ததை க...

என் அன்னைக்கு

என்னை 10 மாதம் சுமக்கவில்லை... அவளாக என்னை பெற்றெடுக்கவுமில்லை... அப்படியும் எப்படி உண்டானதோ  அவள் மீது இப்படி ஒரு தாய் உணர்வு... அம்மா என்ற வார்த்தையின் அர்த்தம் முழுதாய்  சொல்லி கொடுத்தவளும் இவள் தானே... என் மறு தாயே... பாண்டியம்மா... இன்றைய பிறந்த தின வாழ்த்துக்கள்...

சொல்லாத காதலின் வலி

சொல்லும் காதலை விட... சொல்லாத காதல் ரணமாம்... யார் சொன்னது... சொல்லாத காதலையெல்லாம் காகிதத்தில் சேகரித்தேன்.. கவிதையாக மாறியது... சொல்லி இருந்தால் காவியமாக மாறியிருக்குமோ? ஏக்கம் கொண்ட காதலும் தாக்கம் கூட்டுகிறது இதயத்தை... தென்றலிடம் பல முறை சொல்லி வைத்தேன்.. அவனை தீண்டிய காற்று மட்டுமே என்னுள் சுவாசமாக கலந்திட.. வானத்திடமும் பல முறை சொல்லி வைத்தேன்.. அவன் நடக்கும் திசை எல்லாம் மேகத்தால் சூழ்ந்து இளைப்பாற்றிட... பூமியெங்கும் சொல்லி வைத்தேன் அவன் பாதம் நோகாமல் பாதுகாத்திட... ஆனால் அவனிடம் மட்டும் சொல்ல மறந்தேன் இந்த  வாழ்க்கை  அவனுக்காக மட்டுமே என....

அவனோடான வாழ்க்கை

முகமரியா.. முகவரியரியா உறவே... எப்படி நுழைந்தாய் என்னுள்... அன்பு என்னும் ஒரு ஆயுதம் கொண்டு என்னை முற்றிலும் ஆட்சி செய்கிறாயே... இணையத்தில் தொலைத்திட்ட இதயத்தையே... களவாடியது நீ என உணர்ந்திட இத்தனை நாட்கள் ஆயிற்றே.. நீ வரும் திசை எது என கண்களை தேட செய்கிறாயே... எங்கேனும் கேட்டிடும் குரல் கூட உனதோ என ஏக்கம் கூட்டுகிறாயே.. வாழ்நாள் முழுதும் உன் துணை வேண்ட வைக்கிறாயே செல்ல கள்வனே... இதற்கு பெயர் தான் காதல் என்பதையும் கற்று கொடுத்தாயே என்னவனே..

அவனின் சொந்த வரிகள்

Image
கடலளவு காதலை தொடுமளவு தூரத்தை இடையளவு மீட்டுமா நொடி பொழுதும் நகருமா.. காதலும்.... கடவுளும்.... ஒன்று தான் ஒன்று தான் பெண்மையும் இன்பமும்  ஒன்று தான்.. ஒன்று தான்... கண் பார்வை போதுமே... நான் வாழ நீயுமே... அன்பாலே சேரவே... மனமும் விரும்புதே... புன்னகையில் திருடினாய்... சிந்தனையில் நிறைகிறாய்... நினைவும் இங்கு இனிக்குதே... உன்னோடு வாழ தவிக்குதே.. கனவில் வந்த கள்ளியே.. என் அன்னையும் நீயடி...

அவனின் பிரிவு

Image
எங்கோ நீ தூரம் சென்றதாய் மனதில் ஒரு நெருடல்... கண்களில் குளமாய் தேங்கி தேம்புகிறது கண்ணீரும்... மனதும் சொல்ல முடியா பாரத்தில் இந்த அவஸ்தை தேவை தானோ என மனம் ஒரு பக்கம்... சிந்தை முழுதும் நிறைந்த உன் நினைவுகளால்... ஏங்கி ஏங்கி போகிறேன் ஒவ்வொரு நாளும் மரணத்தின் பிடியில்...