To my papa

ஒற்றை மனிதனாய் பிறந்தவனே...

அன்பை அள்ளி தெளிப்பவனே...

எப்பொழுதும் என்னவளில் எண்ணத்தை விதைத்து...


அதில் அன்பையும் நுழைத்து...

பல உறவுகளை வளர்த்தவனே....

ரத்தத்தில் இணைந்ததல்லவே இப்பந்தம்...

இணையத்தாலும்
இதயத்தாலும்
அல்லவா இணைந்தோம்....

கண்டெடுத்த
 ஏணியிலே...

தான் மட்டும் முன்னேறாமலும்..

மற்றவரையும் உயர்த்திட எண்ணுபவனே...

படிகள் எல்லாம்...
புன்னகையோடு.. 
ஒற்றுமையோடு...

கை கோர்த்து நடை போட துணிந்தவனே ..

உறவுகளை எல்லாம் 
ஒன்றிணைத்தவனே...

10 படி ஏற 1 படி சருக்குமாம்...
அதனையும் தான் மட்டும் வாங்கி கொண்டு...
உங்களுக்கு
 பின்னால் துணையாய் நிற்கிறேன் முன்னேறி போங்கள் என ஊக்கம் கொடுப்பவனே...

பல சந்தர்ப்பங்களில் உன்னை கண்டு வியக்கிறேன்...

அத்துனை கஷ்டங்களிலும் புன்னகைத்து...

அதை எங்களிடம் மறைத்தும்..

 பல சமயங்களில் புதைத்தும் ..

அரவணைப்பின் அன்னையாய் நடை போடுகிறாயே...

எப்படி வந்தது உன்னுள்...
இத்தனை பக்குவம்...
இத்தனை பகுத்தாய்வு...

தனிமை நொடிகள் போக்க..
ஏச்சுக்கள் வாங்கவும் தயங்கியதில்லையே...

மரமாய் நீ உயர நிழலில் 
இழைப்பாருகிறோம் நாங்கள் ...

உன் கோவத்தில் நனைந்ததை காட்டிலும்

அதிகம் நனைந்தது உன் அன்பில் தானே...

வேண்டுமே உறவே...
நீ என் மரணம் வரை....

Comments

Popular posts from this blog

சொல்லாத காதலின் வலி

புதிய உறவும்... உணராத அன்பும்