சொல்லாத காதலின் வலி

சொல்லும் காதலை விட...
சொல்லாத காதல் ரணமாம்...
யார் சொன்னது...
சொல்லாத காதலையெல்லாம்
காகிதத்தில் சேகரித்தேன்..
கவிதையாக மாறியது...
சொல்லி இருந்தால் காவியமாக மாறியிருக்குமோ?
ஏக்கம் கொண்ட காதலும் தாக்கம் கூட்டுகிறது இதயத்தை...
தென்றலிடம் பல முறை சொல்லி வைத்தேன்..
அவனை தீண்டிய காற்று மட்டுமே என்னுள் சுவாசமாக கலந்திட..
வானத்திடமும் பல முறை சொல்லி வைத்தேன்..
அவன் நடக்கும் திசை எல்லாம் மேகத்தால் சூழ்ந்து இளைப்பாற்றிட...
பூமியெங்கும் சொல்லி வைத்தேன் அவன் பாதம் நோகாமல் பாதுகாத்திட...
ஆனால் அவனிடம் மட்டும் சொல்ல மறந்தேன்
இந்த வாழ்க்கை அவனுக்காக மட்டுமே என....

Comments

Popular posts from this blog

புதிய உறவும்... உணராத அன்பும்