அவனோடான வாழ்க்கை

முகமரியா..
முகவரியரியா உறவே...
எப்படி நுழைந்தாய் என்னுள்...
அன்பு என்னும் ஒரு ஆயுதம் கொண்டு
என்னை முற்றிலும் ஆட்சி செய்கிறாயே...
இணையத்தில் தொலைத்திட்ட இதயத்தையே...
களவாடியது நீ என உணர்ந்திட இத்தனை நாட்கள் ஆயிற்றே..
நீ வரும் திசை எது
என கண்களை தேட செய்கிறாயே...
எங்கேனும் கேட்டிடும் குரல் கூட உனதோ என ஏக்கம் கூட்டுகிறாயே..
வாழ்நாள் முழுதும் உன் துணை வேண்ட வைக்கிறாயே செல்ல கள்வனே...
இதற்கு பெயர் தான் காதல் என்பதையும் கற்று கொடுத்தாயே என்னவனே..


Comments

Popular posts from this blog

சொல்லாத காதலின் வலி

புதிய உறவும்... உணராத அன்பும்