அழகான நாட்கள் 1.4.2022 -4.4.2022

வந்தடைவதற்குள் 1000 அழைப்பு

பல நூறு எதிர்பார்ப்பு...

வரும் வழியில் ஏதும் நேராமல் இருக்க பல பிரார்த்தனைகள்...

சோர்வாகாமல் இருக்க சில வேண்டுதல்கள்..

வந்திரங்கியதும் ஏக்கம் மட்டும் அவன் முகம் கண்டிட..

கண்டதும் ஆனந்த புன்னகை கண்களிலும் வெளிபட்டதே...

சில நொடிகள் பார்த்தும் பார்க்காதது போல விழி பதுங்க...

அவனருகே சென்ற உடல் மட்டும் நகர மறுத்ததே..

இப்படியாக சில நொடிகள் கடந்திட...
வாய் மட்டும் வழக்காட தொடங்கியது அவனிடமும்...
உடன் வந்தவரிடமும்...

பின் காதல் பார்வை எய்தி அமர்ந்திட்டாள் அவனருகிலேயே...

பார்த்து பார்த்து அவனை கவனிக்க உணவு பரிமாற்றம் ஒரு புறம் நடக்க...

சீண்டலும் சிறு உரசலும் என பட்டும் படாமல் தொட்டு செல்லும் தென்றலாய்..
தீண்டலும் மறு புறம்....

வழியனுப்ப மனமின்றி
போகாதே என உள்ளம் சொல்ல...

பார்த்து போ என உதடும் சொன்னது...



Comments

Popular posts from this blog

சொல்லாத காதலின் வலி

புதிய உறவும்... உணராத அன்பும்