Poet
தொலை தூரம் வாழும்
என் மனவாளனே...
செவிகள் கூட முடமானதடா
உன் குரல் கேட்டிடாமல்...
தலையணை முழுதும்
கண்ணீரின் ஈரங்களாய்..
என்னை ராணியாக வாழ வைக்க
நீ அடிமையாய் வாழ்ந்தது போதுமடா...
கண்கள் முழுதும் உன் முகமாய்..
நினைவுகள் எல்லாம் உன் உருவாய்....
ஸ்வாசத்தோடு கலந்திட்ட உன் வாசமாய்...
ஏக்கத்தோடு கலங்குகிறேன்
நான் பாசமாய்...
வந்து சேர்ந்து விடு..
உன்னோடு என்னை மீண்டும்
சேர்த்து விடு...
Comments
Post a Comment