என் தனிமையின் துணைவனோ... புன்னகை அரசனோ... கவலைகள் மறக்க செய்யும் மந்திரக்காரனோ.. இவன் என் மாயவன்... அவனின் முறுக்கிய மீசைக்குள் பலமுறை பதுக்கி வைத்து கொள்கிறான் என் மீது கொண்ட காதலையும்... அவன் ஓர விழி பார்வையும் உதட்டோர புன்னகையும் பலமுறை கொன்று போகிறது இதயத்தை.. காந்த பார்வை வீசி ஈர்த்து போகிறான் என்னையும் மொத்தமாய்... விரல்களின் இடைவெளியையும் நிரப்பிடுகிறான்.. என் விரல்கள் பிடித்து.. நெஞ்சோடு முகம் சாய்க்க.. மூச்சு காற்றில் மோட்சம் தருகிறான்... சொர்க்கம் சென்றடைந்ததாய்.. அணைப்பில் அவன் உடலோடு என் உடல் சேர்க்க.. கை கொண்டு அழுத்திட பல நரம்புகளின் மாற்றங்கள் உணர்கிறேன்... அவன் இதழ் செய்யும் லீலையில் என் மொத்தமும் இழக்கிறேன்.. என்னை இழந்தவளாய் அவனோடு லயிக்கிறேன்.. இப்படியும் ரசிக்க முடியும் என உணர செய்த ஆணவன்.. இப்படியும் வாழ முடியும் என கற்று தந்த மாயவன்.. அவனே என்றும் என்னவன்...