அவனின் மாற்றங்கள்
இவன் மட்டும் உயிரென நான் வாழ்ந்திட... இவன் கனவை நாளும் நான் சுமந்திட... அன்னையாக மாற்றமும் நான் கொண்டிட... அரவணைத்து ஆரவாரம் நான் செய்திட... எல்லாம் பொய்யென... இன்னொரு உறவு மட்டும் மெய்யென... விலகி சென்று வலி கொடுத்த போதும்... நிழலாய் காக்க எண்ணுகிறேன்... அவனை ஈன்ற உயிருக்காக... அனைத்தும் இவனுக்கென செய்ய துணிந்தவள்... நிலை குலைந்து நிற்கிறேன் தனிமையின் பிடியில்... அவனின் மாற்றம் கண்டல்ல .. அவனால் இவள் கொண்ட ஏமாற்றத்தினால்...